இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையினை மேம்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ. தலதா அத்துகோரளவிடம் 03, டிசம்பர், 2015 அன்று பி.ப 5.00 இலிருந்து 6.00 வரை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சந்திப்பில் வைத்து கையளிக்கப்பட்டது.

 

 • நட்பு நாடுகளின் (ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய இணையம்) ஆதரவினைப் பெறுமுகமாகக் கருத்தாதரவு தேடுவதற்கு அரசாங்கத்தை கோருதல்.
 • சவுதி அரேபியாவிற்கு புலம்பெயர் வேலையாட்களை அனுப்புவதன் மீதான தடையொன்றை நடைமுறைப்படுத்துவதனை பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை கோருதல். (இந்தோனேசியாவின் நடைமுறையை பின்பற்றுதல்)
 • புலம்பெயர் வேலையாட்கள் செல்லும் நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான தரநிலைப்படுத்தல்கள், அந்நாடுகளின் சர்வதேச தொழில் சட்டங்களை உள்ளீர்ப்பது தொடர்பான ஏற்பாடுகள், புலம்பெயர் வேலையாட்களுக்கான உள்நாட்டு சட்ட பாதுகாப்பின் இருக்கை, வேலைக்கான வசதி நிலை மற்றும் துஸ்பிரயோகங்கள் என்பன தொடர்பான தகவல்களை அரசாங்கம் வைத்துள்ளதா என வினவுதல்.
 • மனித உரிமைகள் தரநிலையில் கீழ்நிலையிலுள்ள நாடுகளுக்கு புலம்பெயர் வேலையாட்களை அனுப்புவதை குறைக்க (தடையொன்றை நடைமுறைபடுத்த முடியாத சந்தர்ப்பத்தில்) அரசாங்கத்தை கோருதல்.
 • நாடுகளின் தரநிலை தொடர்பான தகவல்களை பொதுமக்களிற்கு வெளிக்கொணர அரசாங்கத்தை கோருதல்.
 • புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான மாநாட்டு முடிவுகளை (தொழிலுக்கான புலம்பெயர்வு மாநாடு 1949, புலம்பெயர் தொழிலாளர்கள் மாநாடு 1975) சட்டக்கோவையில் உள்ளீர்க்க அரசாங்கத்தை கோருதல்.
 • 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை உடைய தாய்மார்களை வெளிநாட்டு தொழிலிற்கு செல்வதை பரிந்துரை செய்யாத மற்றும் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை உடைய தாய்மார்களை திருப்திகரமான மாற்று ஏற்பாடுகள் உள்ளபோது மட்டும் வெளிநாடு செல்ல பரிந்துரைக்கின்ற 2012 சுற்றுநிருபத்தை மீள கவனிப்பிற்கு உட்படுத்தும்படி கோருதல்.

 

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டு முடிவுகளை இலங்கை சட்டமாக்கியுள்ளதால், பல பணிப்பெண்கள் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுதல், மனிதஉரிமை மீறல்களுக்கு உள்ளாகுதல்  (றிஷானா நபீக் மீதான கொடூரமான மரணதண்டனை உட்பட) அனைத்தும் வெளிநாடுகளுக்கு வேலைதேடி செல்வதற்கான உரிமையினை மறுப்பதற்கான காரணமாக கூறமுடியாது.

 

 • தொழிலாளர்களை குறை திறமையிலிருந்து மிகை திறமையிற்கு உயர்த்துவது தொடர்பான அரசாங்கத்தினது திட்டங்கள் தொடர்பாக வினவுதல்.
 • வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சிவில் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த கோருதல்.
 • புலம்பெயர் தொழிலாளர்களது உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்கள் செல்லும் நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த கோருதல்.
 • சட்டத்திற்கு உட்படும் இருதரப்பு உடன்படிக்கைகளை அந்நாடுகளுடன் ஏற்படுத்துதல். இவ்வுடன்படிக்கைகள் பணிப்பெண்கள் உட்பட அனைவருக்கும் ஒரே சீரான தொழில் உடன்படிக்கை கிடைக்கப்பெறுவதையும் அவர்களுடைய அடிப்படை மனித உரிமைகள் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதையும் உறுதிசெய்யவேண்டும். தொழில் உடன்படிக்கைகள் தொழில் அறிவுறுத்தல், சம்பளங்கள், மற்றும் தொழில் நிபந்தனைகளை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
 • வெளிநாடு செல்வதற்கு முன்னதான பயிற்சிகள் மற்றும் தகவல்கள் ஏற்கனவே வழங்கப்படுகின்றன. எனினும் சில புலம்பெயர் தொழிலாளர்கள் அவை போதுமானதாக இல்லையென கருதுகின்றனர். பயற்சி மற்றும் தகவல் வழங்கும் அமர்வுகள் தரமுயர்த்தப்படவேண்டும். எனவே புலம்பெயர்தல் பற்றிய முடிவுகள் சரியாக அறிவுறுத்தப்பட்டிருக்கும். மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் தமது உரிமைகள் தொடர்பாகவும் எவ்வாறு உதவிகோருவது மற்றும் முறைப்பாடு செய்வது பற்றியும் தெளிவூட்டப்பட்டிருப்பார்கள்.
 • தொழில் உடன்படிக்கை தொழிலாளர்களது மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதோடு அவர்களுக்கு அதன் பிரதி வழங்கப்படவேண்டும். தொழில் உடன்படிக்கை மதிக்கபடாதபோது எவ்வாறு முறைப்பாடு செய்வது என்பது பற்றியும் அறிவுறுத்தப்பட வேண்டும்.
 • வெளிநாட்டு தூதுவராலயங்களில் தொழிலாளர்கள் நலன் பேணும் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். எனினும் அதிகளவிலான இலங்கை தொழிலாளர்கள் வதியும் நாடுகளில் தொழிலாளர் நலன்புரி சேவைகளும் ஆலோசனை சேவைகளும் மேம்படுத்தப்படவேண்டும்.
 • பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு தூதரகங்களில் பெண் அலுவலர்கள் கடைமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். அவ்வலுவலர்களை 24 மணிநேரமும் தொடர்புகொள்ளக்கூடியதாக இருப்பதுடன் திறமைவாய்ந்த உள்நாட்டு சட்டத்தரணிகளின் தொடர் ஒழுங்கு கோப்பொன்றும் இருக்கவேண்டும். மேலும் தடுப்பு காவல் நிலையங்கள் ஒழுங்காக விஜயம்செய்யப்படவேண்டும்.
 • உள்நாட்டு வீட்டு பணியாட்களை பாதுகாக்கும் சட்டங்கள் இலங்கையில் கொண்டுவரப்படுமானால் வெளிநாடு செல்லும் வீட்டு பணியாட்களை பாதுகாப்பது தொடர்பாக அந்தந்த நாடுகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருவது இலகுவாகும். அந்தவகையான பாதுகாப்பு வீட்டு பணியாட்கள் தொடர்பான சட்டமொன்றை உள்ளடக்கியதாக சர்வதேச தொழில் நிறுவனத்தின் 189ம் மாநாடு முடிவின்படி அமைந்ததாக இருத்தல்வேண்டும்.
 • தேசிய தொழிலாளர் புலம்பெயர்வு கொள்கைகளுக்கு அமைய, நாடு திரும்பும் தொழிலாளர்களை வினைத்திறனுடன் சமூகத்துடன் மீளிணைத்தல் மீதான அதிகரித்த கவனத்தை வரவேற்கையில், மீளத்திரும்பும் சிலர் (மிகமுக்கியமாக துஸ்பிரயோகத்திற்கு உட்பட்டவர்கள்) மீளிணைத்தல் சேவைகள் வினைத்திறனற்று இருப்பதாக குறிப்பிடுவதையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.

குறிப்பாக பெண்கள், இளையோர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கான வருமானமீட்டும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் தொழில் தேடி புலம்பெயர்தலை ஒரு தேவையாக அல்லாது தெரிவாக மட்டும் இருப்பதாக உறுதிபடுத்த முடியும். தொழில்முயற்சிக்கான சிறு கடன்கள் அவ்வாறானதொரு முயற்சியாக அமையலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s